ஆசிரியர் தின விழா அறிக்கை

வள்ளுவர் அறிவியல் மற்றும் வேளாண்மை கல்லூரி – கரூர்.

ஆசிரியர் தின விழா அறிக்கை

நாள்: 05.09.2019

ஆசிரியர் தின விழா 05.09.2019 அன்று கொண்டப்பட்டது. அவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் திரு. சாலை பற்குணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர்தம் உரையில் அரசாட்சி புரிந்த தசரதனைப் பார்த்து மிதிலை அரசன் சீதையை ராமனுக்கு மணம் முடித்து வைக்கவில்லை. மாறாக ராமனின் குருவான விஷிட்டரைப் பார்த்துத் தான் பெண் கொடுத்தான். எந்தக் காலங்களிலும் ஆசிரியர் சமுதாய மேன்மை படைத்த ஒன்றாகவே இருக்கிறது. என்றும், 42 ஆண்டுகள் ஆசிரியர் தினத்தை நான் ஆசிரியராக கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் என்று பெருமைப்பட க் கூறினார்.

தலைமையுரை வழங்கிய கல்லாரி தாளாளர் திரு.க. செங்குட்டுவன் அவர்கள் கற்றுக்கொண்டும் கற்பித்துக் கொண்டும் இருக்கும் ஒரே பணி ஆசிரியர் பணி. ஆசிரியர்கள் மாணவர்களின் திறமையைத் தூண்டிவிட்டாலே அவர்கள் வாழ்க்கை மேலோங்கி விடும். ஆசிரியர் பணி என்பது என்னை பொறுத்தவரை கிடைப்பதற்கு அரிய பணி என்று குறிப்பிட்டார். வாழ்த்துரை கல்லாரியின் செயலாளர். திருமதி. ஹேமலதா செங்குட்டுவன் அவர்கள் வழங்கினார். அவர்தம் உரையில் களிமண்ணைக் கூட உயிரோட்டமுள்ள சிலையாக உருவெடுக்க வைக்கும் சிற்பிதான் ஆசிரியர். ஆசிரியர் தொழில் என்பது சவாலான ஒன்று. ஜோதி வடிவாக, சுடர் விளக்காக ஞானதீபமாக மாணவர்கள் உருவாக வழிகாட்டுங்கள் என்றும் ஆசிரியர்களின் மேலான தன்மைகளை எல்லாம் குறிப்பிட்டு பேசினார் .

சிறப்புரையாற்றிய பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் திரு.அழகர் ராமானுஜம் அவர்கள் ஆயிரம் அன்னச் சத்திரங்கள் அமைப்பதிலும் மேலானது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று ப் படிப்பது என்பது கல்வியின் சிறப்பையும் படிப்பில் என்ன படிப்பு படிப்பது என்பதல்ல முக்கியம் எப்படிப் படிப்பது என்பது தான் முக்கியம் என்றும், மாணவர்கள் ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் உற்ச்சாகபடுத்த வேண்டும் என்றும் பேசினார். மிகப்பெரும் தலைவர்கள் உருவாகக் காரணமாய் இருந்தவர்கள் ஆசிரியர்கள் தான் என்றும் கூறினார். விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் திருமதி. பா. விஜயருக்மணி அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.