புதிய தலைமுறை மன்றம் துவக்கவிழா

கரூர் வள்ளுவர் கல்லூரியில் புதிய தலைமுறை மன்றம் துவக்கவிழா

கடந்த 13.10.2017 அன்று கரூர் வள்ளுவர் கல்லூரியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் மாணவர் மன்றம் துவக்கப்பட்டது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் திரு க.செங்குட்டுவன் தலைமை தாங்கினார். புதிய தலைமுறை குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலர் திரு சியாம்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். திரு சியாம்குமார் பேசுகையில் புதிய தலைமுறை மன்றத்தின் செயல்பாடுகளையும் அதனால் சமுதாயத்திற்கு ஏற்படும் பலன்கள் பற்றியும் எடுத்துரைத்தார். கல்லூரியில் வணிகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் ஸ்ரீராம் தலைவராகவும், லோகநாதன் செயலாளராகவும், சந்துரு பொருலாளராகவும் இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரும் காலங்களில் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படும் பல திட்டங்கள் இம்மன்றத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு கல்லூரி மாணவர்களால் செயல்படுத்தப்படும்.