முட்டைத் திருவிழா செய்தி குறிப்பு

 

நம் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 27.10.2017 வெள்ளிக் கிழமை ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் சயின்ஸ் துறை சார்பில்  “முட்டைத் திருவிழா” EGG FESTIVAL கேட்டரிங் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோழி முட்டைகளை கொண்டு புதுமையான பல்வேறு உணவு வகைகளை மாணவர்கள் செய்து காட்டினர். 50ற்கும் மேற்பட்ட முட்டை உணவு வகைகள் தயாரித்து வைத்திருந்தனர். கரூர் நட்சத்திர ஹோட்டல் தி ரெசிடென்னசியின்  தலைமை உணவாக்க வல்லுநர் CHEF. அப்துல் காதர் அவர்களுடன் மனித வள தலைமை நிர்வாகி திரு. எம்லின் ரெனால்டோ சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து சிறப்பாக செய்திருந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை வழங்கினர். முன்னதாக கல்லூரி தாளாளர் திரு க. செங்குட்டுவன் அவர்கள் தலைமை உரையாற்றினார், வள்ளுவர் கல்லூரி வழங்கும் வாய்ப்புகளை தக்க காலத்தில் உணர்ந்து மாணவர்கள் தங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திட வேண்டும் என வலியுறுத்தினார். திருமதி ஹேமலதா செங்குட்டுவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார், மாணவர்களின் படைப்பாற்றல் மட்டுமே  அவர்கள் பெற்றோர்களின் கனவுகளை நிஜமாக்கும் என்பதை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிகளை  சிறப்பாக உதவிப் பேராசிரியர். Chef .குணசேகர் மற்றும் உதவிப் பேராசிரியர் திரு. வினோத் ராஜா அவர்கள் செய்திருந்தார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் துறைத்தலைவர் சார்பில் உதவிப்பேராசிரியர் திரு. பிரின்ஸ் ஆண்டனி நன்றியுரை வழங்கினார்.

நன்றி!

முட்டைத் திருவிழா செய்தி குறிப்பு 

Date: October 27, 2017

[/one_half]

Read more