திறன் மேம்பாட்டு பயிற்சி

வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில்
திறன் மேம்பாட்டு பயிற்சி

இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைக்கு செல்லுவதற்கு தங்களின் தனித்திறமை மற்றும் ஆளுமைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் 18.08.18 அன்று HCL Technologies சென்னை மேலாளர் கார்த்திக் மற்றும் Splendio Technologies மேலாண் இயக்குனர் சாலமன் அசோக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

வேலைவாய்ப்பிற்கு மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளுவது எவ்வாறு என்ற வினாவுடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மேற்கண்ட பயிற்சி சென்னை ICT Academy மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மொழி ஆளுமைத் திறன், பன்முகத்திறன், நேரம் தவறாமை, உலக நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல், கற்ற கல்வியின் அறிவை தக்க சமயத்தில் வெளிக்காட்டும் திறன் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டியான உலகத்தில் ஒவ்வொருவரும் இத்திறன்களை மேம்படுத்தினால் தான் வேலைவாய்பினால் ஏற்படும் போராட்டங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள முடியும்.

மேலும், கருத்து பரிமாற்றம், படைப்பாற்றல்திறன், வணிக அறிவு, திட்டமிடல், குழு ஒத்துழைப்பு மற்றும் சுய ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டியான உலகில் உன்னை நீயே வளர்த்துக் கொள்ள வேண்டும். நடப்பு நிகழ்வு வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய ஆற்றல் வேண்டும். செய்ய வேண்டிய வேலையினை நேசித்தும், புத்துணர்ச்சியோடும் செயல்பட வேண்டும். உங்களின் திறமையினைப் பார்த்து பிரத்தியோக உரிமையை நிறுவனம் அளிக்கும் என்ற நற்கருத்துகளின் வழியாக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருவரும் தங்கள் கருத்துக்களைச் சிந்தனையைத் தூண்டும் நோக்கில் உரையினை நிகழ்த்தினார்கள்.