வள்ளுவர் கல்லூரியில் மாதிரி பாராளுமன்றம்

வள்ளுவர் கல்லூரியில் மாதிரி பாராளுமன்றம்

கரூர் வள்ளுவர் கல்லூரியில் 22.10.2019 அன்று வணிகவியல் மாணவர்கள் பங்குகொண்ட மாதிரி பாராளுமன்றம் அமைக்க பட்டு விவாதம் நடைபெற்றது. நிகழ்ச்சியினை கல்லூரியின் தாளாளர் திரு.க.செங்குட்டுவன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார். கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் திரு.பிரகாசம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் போன்று அவரர் தொகுதியின் முக்கிய பிரசினைகளையும் நாட்டில் நிலவும் பொது பிரச்சினைகளையும் அந்தந்த மாநில மொழிகளில் மாணவர்கள் எடுத்துரைத்தனர். மேற்கண்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பிரகாசம் படிக்கின்ற பருவத்தில் நாட்டில் நிலவும் பல்வேறு ப்ரசினைகளை மாணவர்கள் விரிவாக தெரிந்து கொள்ள வழி செய்த வள்ளுவர் கல்லுரி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். மேற்கண்ட நிகழ்ச்சியை வணிகவியல் உதவி பேராசிரியை முனைவர் ராதிகா அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார் .