FRESHERS DAY – 2018

 

வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா வள்ளுவர் கல்லூரியின் 2018-2019 ஆம் வருடத்திற்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா 25.6.2018 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் த.சாலை பற்குணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பிரபல எழுத்தாளரும் மக்கள் சிந்தனை பேரவையின் மாநில தலைவருமான திரு த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

கல்லூரி தாளாளர் உயர் திரு க.செங்குட்டுவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மதிப்புமிக்க மனிதனாக மாற்றுவது கல்லூரி வாழ்க்கை என்றும் வாழ்க்கையின் குறிக்கோள்களைக் கற்றுத் தருவது கல்லூரியே என்றும் கூறினார்.

 

வாழ்த்துரையில் செயலாளர் அம்மா உயர் திரு க.ஹேமலதா செங்குட்டுவன் அவர்கள் இக்கல்வி நிறுவனம் தொடங்கியது முதற்கொண்டு ஒரு மனிதன் நல்ல ஒழுக்கத்தோடு பண்போடு இப்படித்தான் வாழ வேண்டும் என்று கற்று தரபடுகிறது என குறிப்பிட்டு பேசினார்கள்.

 

இக்கல்லூரியில் கடந்த வருடம் படித்து முடித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற பயனை முதலாண்டு பயில வருகை புரிந்துள்ள மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.; இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படித்ததினால் அவர்கள் பெற்ற புகழையும் சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைத்த மரியாதையையும் எல்லோர் முன் தங்கள் கருத்தினை முன்வைத்தார்கள்.

 

மரம் வளர்ப்பை பற்றி 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய சிறந்த கட்டுரைக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது.

 

சிறப்பு விருந்தினர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பேசினார்கள். கடந்த 40 ஆண்டுகளாக கல்லூரிகள்ரூபவ் பள்ளிகள் கருத்தரங்கம் போன்றவற்றில் பேசிவருகிறேன். இக்கல்லூரியின் வளர்ச்சியினையும் தாளாளர் அவர்கள் மாணவர்கள் பேரில் கொண்டுள்ள அக்கறையையும் காணும் போது நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு தனியார் கல்வி நிறுவனத் தலைவர் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி தருதல் மற்றும் சுயவேலை வாய்ப்பிற்கு மூன்று கோழிகுஞ்சு தருதல்ரூபவ் கரூயஅp;ரில் சுமார் ஏழாயிரம் மாணவர்களுக்கு இவ்வுதவிகளை செய்திருப்பது சாதனையே! 1330 குறளை படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி யாரும் செய்திராத அற்புத பணி வள்ளுவனின் வழிகண்டு இக்கல்லூரியை சிறப்போடு நடத்திவரும் தாளாளர் அவர்களுக்கு நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தலைமையுரை, வாழ்த்துரை சிறப்புரையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்து இருந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆன்றோர் அவையில் பழகு தமிழில் தொகுப்புரை வழங்கினார் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சு.சித்ரா அவர்கள் அன்னைத் தமிழில் அழகுபட முறையானதொரு நன்றியினை முத்தாய்ப்பாய் நல்கினார். வணிகத் துறைத்தலைவர் முனைவர் மு.ரமேஷ்குமார் அவர்கள் இனிதே நாட்டுப் பண்ணோடு முதலாண்டு துவக்க விழா நிறைவடைந்தது.