KIDZA’19

KIDZA’19

நமது வள்ளுவர் கல்லூரியின் நவநாகரீக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவடைப்பு துறை சார்பாக KIDZA’19 , குழந்தைகளுக்கான ஆடை அலங்கார அணி வகுப்பு போட்டிகள் கரூர் வள்ளுவர் அரங்கத்தில் கடந்த 16.02.19 சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியானது சிறப்பு விருந்தினர்களால் குத்துவிளக்கேற்றப்பட்டு இனிதே தொடங்கியது.அடுத்த நிகழ்வாக திருமதி ஆ.நதியா துறைத்தலைவர்; நவநாகரீக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை, அவர்களால் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற குழந்தைகள், பெற்றோர் மற்றும் பொது மக்களை சிறப்பாக வரவேற்றார்.

அதன்பின் கல்லூரியின் தாளாளர் திரு.க.செங்குட்டுவன் ஐயா அவர்களால் தலைமையுரை வழங்கப்பட்டது.
இவ்விழாவின் துவக்க உரை முனைவர் மு. பச்சையப்பன், நவநாகரீக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை தலைவர், PGS கல்லூரி கோவை அவர்களால் வழங்கப்பட்டது.

அதன் பிறகு குழந்தைகளுக்கான ஆடை அணி வகுப்பு போட்டிகள் நடைபெற்றன. இதில் 17 பள்ளிகளைச் சார்ந்த 190 குழந்தை செல்வங்கள் பங்கு பெற்றனர். அதன் தொடர்ச்சியாக நவநாகரீக தொழில்நுட்பம் மற்றும் ஆடை அணி வகுப்பு துறை மாணவ மாணவியர்களால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளின் அணி வகுப்பு நடைபெற்றது.

அடுத்ததாக வள்ளுவர் கல்லூரியின் நிர்வாக அவை உறுப்பினர் திருமதி தாரணி அவர்களால் சிறப்புரை வழங்கப்பட்டது. மேலும் முனைவர் வு.சரவணக்குமார் ZED Consultant அவர்களால் வாழ்த்துரை வழங்கி சிறப்பு விருந்தினர்களால் வெற்றி பெற்ற குழந்தைச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முதன் முறையாக கரூரில் இவ்வகையான ஆடை அலங்கார அணிவகுப்பு மக்களின் ஆதாரவையும், பெருமதிப்பையும் அதிகளவு பெற்றுள்ளது. இறுதியாக இனிதாக நன்றியுரை செல்வி பு.மீரா அவர்களால் வழங்கப்பட்டது அத்துடன் தேசியகீதம் பாடி நிகழ்ச்சி இனிதே நிறைவுக்கு வந்தது.