திருவள்ளுவரை பற்றி

திருவள்ளுவர்
(Thiruvalluvar)

தர்மம் தகர்கின்ற போதெல்லாம் தனித்துவமான மறைநூல்கள் அவ்வப்போது தோன்றி அறத்தை மனிதர்களுக்கு போதிக்கும். அவ்வாறே, பல ஆண்டுகளுக்கு முன் உலக உயிர்கள் அறத்தோடு இன்பமாக இவ்வுலகில் வாழ ஈரடி குறளில் உலக தத்துவங்கள் அனைத்தையும் 1330 அமுத துளிகளாய் வள்ளுவம் எனும் அற்புத படைப்பை உலகிற்கு அளித்தவர் திருவள்ளுவர்.

 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு.

-என்ற குறளின் வழி திருவள்ளுவர் ஜாதி, மதம், பாலினம், நாடு மற்றும் கண்டங்கள் கடந்து உலகத்தார் அனைவருக்கும் உற்ற ஒரு கருத்தை விளக்குகிறார். எந்த ஒரு பொருளை யார் கூறினாலும் அதன் மெய்மையை அறிந்து செயல்பட வேண்டும். இதில் குடும்பத்தார், தொழில் முனைவோர், ஒரு நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறை ஏன் நாடாளும் அரசனுக்கும் பொருந்தும்.

இவ்வாறு பொதுவுடைமை கருத்துகளை எடுத்துரைப்பதால் திருக்குறளை உலகப் பொதுமறை என்றும் திருவள்ளுவரை பெருநாவலர் என்றும் நாம் போற்றுகிறோம். அதே போல் ஒரு சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் திருக்குறளில் எடுத்தியம்பியுள்ளார். மனிதன் தவிர்க்க வேண்டிய பழக்கங்களாக கல்லுண்ணாமை, புழால்லுண்ணாமை, புறங்கூறாமை, மேலும் ஏற்க வேண்டிய பழக்கங்களாக நட்பு, நட்பாறாய்தல், சுற்றத்தாரைப் பேனுதல், பெரியோரை மதித்தல், விருந்து ஒக்கல் என வாழ்வியலையும் அதன் விழுமியங்களையும் படைத்துள்;ளார்.

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களுள் ஒருவரான லியோ டால்ஸ்டாய் திருக்குறள் தன்னை மிகவும் ஈர்பதாக கூறியுள்ளார்.
ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்ற எழுத்தாளர்கள் திருக்குறளை படித்ததோடு மட்டும் இல்லாமல் அதன் பெருமையை,நட் கருத்துகளை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக அந்நூலை மொழிபெயர்த்துள்ளனர்.

ஒரு செயலை செய்வதற்க்கும்,அதில் வெற்றி காண்பதற்க்கும் தேவையானவையாக ஊக்கமுடைமை,வலியறிதல் மற்றும் காலமறிதல் என வள்ளுவர் வகுத்துள்ளார்.

 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
   தெய்வத்துள் வைக்கப் படும்.

எப்படி ஒரு மனிதன் வையத்துள் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளை வகுத்த திருவள்ளுவரின் பெயரால்,அவரின் வாழ்வியல் கருத்துகளையும்,கல்வி மற்றும் மேலாண்மையில் அவர் வகுத்த பாதையின் வழி
--- அறத்தோடும் இன்பத்தோடும் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் பயணிப்போம் வாருங்கள்.